இளவரசர்கள் ஹரியையும் வில்லியமையும் இணைக்க டயானாவின் குடும்பத்தில் இருக்கும் ஒரே நபர்
பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கிடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர, அவர்கள் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆனால், அப்படிப்பட்ட சூழலிலும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் பங்குகொண்டார்கள்.
அது, அவர்களுடைய தாயாகிய டயானாவின் சகோதரியின் கணவருடைய இறுதிச்சடங்கு.
ஹரியையும் வில்லியமையும் இணைக்க இருக்கும் ஒரே நபர்
ஆக, வில்லியமும் ஹரியும் தன் தாயின் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது, டயானாவின் அக்காவான ஜேனுடைய கணவரான ராபர்ட்டின் இறுதிச்சடங்கில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டதிலிருந்து தெளிவாகப் புரிகிறது.
இளவரசர்கள் வில்லியமையும் ஹரியையும் இணைக்க டயானா குடும்பத்தினர் எவ்வளவு முயற்சிகளை திரைமறைவில் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத விடயம்.
எப்படியும், வில்லியமையும் ஹரியையும் இணைக்க ஒரே ஒரு நபரால்தான் முடியும் என்கிறார் அக்குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர்.
அது, டயானாவின் அக்காவான ஜேன் மட்டுமே என்கிறார் அவர்.