காவலர் உடற்தகுதித் தேர்வில் 10 இளைஞர்கள் உயிரிழப்பு – ஜார்க்கண்ட்டில் பரபரப்பு!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 10 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடற்தகுதித் தேர்வு
ஜார்க்கண்டின் ராஞ்சி, கிரிதி, ஹசாரிபாக், பலாமு, கிழக்கு சிங்கம் மற்றும் சாகேப்கஞ்ச் ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த 22 ஆம் தேதி முதல் காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நடந்துவருகிறது. எழுத்து தேர்வு முடிந்து இன்று உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது . இந்த தேர்வில் பங்கேற்ற ஏராளமான இளைஞர்கள் பலர் நள்ளிரவு முதல் வரிசையில் நீண்ட நேரம் நின்றுள்ளனர். .
அடுத்த நாள் காலையில் கொளுத்தும் வெயிலில் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயங்கி விழுந்துள்ளனர். அப்போது பணியிலிருந்து காவலர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
10 பேர் பலி
அவர்களில் 11 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.மேலும் இவர்களது மரணம் குறித்து மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது : இறந்தவர்களில் சிலர் ஊக்க மருந்து உபயோகித்திருக்கலாம் அல்லது தேர்வுக்கு முன்னர் எனர்ஜி ட்ரிங்குகளை குடித்திருக்கலாம்.
நீண்ட நேரம் வரிசையில் நின்றதும், சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்றும் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.