தபால் மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய 4ஆம் திகதி மாவட்ட செயலகம், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பதற்கான விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பு
அத்துடன், 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் முப்படையினர் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு வாக்களிப்பதற்கான தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தபால் மூலம் வாக்களிக்கும்போது ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காகத் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு அல்லது தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனுமொன்றை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.