;
Athirady Tamil News

தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் – உயிரை கைப்பற்றிய META AI

0

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் META AI முக்கிய பங்கு வகித்துள்ளது.

காதல் திருமணம்
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ அருகே உள்ள மோகன் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண்ணும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

தற்கொலை முயற்சி
அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால் சில நாட்களுக்கு முன் அந்த இளைஞர் அந்த பெண்ணை விட்டுவிட்டு தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார். கணவன் விட்டுச் சென்றதால் விரக்தியடைந்த அந்த பெண், கடந்த 31 ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன் நாற்காலியில் நின்று கொண்டு சிவப்பு நிற துப்பட்டாவை தனது கழுத்தில் சுற்றி அதன் மற்றோரு முனையை மின் விசிறியில் கட்டி தற்கொலை தயாராக இருப்பது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மெட்டா AI
உடனே மெட்டா ஏஐ இது குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி ஒன்றை உத்தரப்பிரதேச டி.ஜி.பி அலுவலகத்தில் உள்ள சமூக வலைதள கண்காணிப்பு அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது. தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

அந்த பெண்ணுக்கு ஆலோசனை அளித்த மகளிர் காவலர்கள், அந்த பெண் குடுத்த புகாரின் அடிப்படியையில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டா(meta) உடன் இணைந்து செயல்படுகிறது உத்திரபிரதேச காவல்துறை. ஜனவரி 2023 முதல் ஆகஸ்ட் 2024 வரை, இந்த தளங்களில் தற்கொலை எண்ணம் கொண்ட இடுகைகளைக் கண்டறிந்து 460 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றுவதில் மெட்டா AI முக்கிய பங்கு வகித்துள்ளது.

தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050.

You might also like

Leave A Reply

Your email address will not be published.