;
Athirady Tamil News

பாரீஸ் ஒலிம்பிக் வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

0

உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி (33), தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

பெட்ரோல் ஊற்றி தீ
உகாண்டாவைச் சேர்ந்த ரெபேக்கா செப்டேஜி (Rebecca Cheptegei) என்ற வீராங்கனை, பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44வது இடத்தைப் பிடித்தார்.

இவரது காதலர் டிக்சன் என்டிமா கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்து வேறுபாட்டின்போது, ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் தீக்காயமடைந்த ரெபேக்கா கென்யாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். என்டிமாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் அவரும் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்நிலையில் ரெபேக்கா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரெபேக்கா சமீபத்தில் டிரான்ஸ் நாஸோயாவில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதனால் அவருக்கும் காதலருக்கு இடையே எழுந்த தகராறினையடுத்து என்டிமா அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுள்ளார்.

இதுகுறித்து உகாண்டா தடகள கூட்டமைப்பு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “குடும்ப வன்முறைக்கு சோகமான பலியான எங்கள் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி இன்று அதிகாலை காலமானதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். ஒரு கூட்டமைப்பாக, இதுபோன்ற செயல்களை நாங்கள் கண்டிருக்கிறோம் மற்றும் நீதிக்காக அழைப்பு விடுக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளது.

ரெபேக்கா 2023 உலக சாம்பியன்ஷிப்பில் மராத்தானில் 14வது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.