;
Athirady Tamil News

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் : வேட்பாளர்களிடையே இடம்பெறவுள்ள நேரடி விவாதம்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே நேரடி விவாதமொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிகழ்வானது, ‘March 12 Movement’ இன் ஏற்பாட்டில் நாளை (07) பிற்பகல் மூன்று மணி முதல் ஐந்து மணிவரை இடம்பெறவுள்ளது.

இந்த விடயத்தினை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் பெப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hetiyarachi) தெரித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள்
இந்த நிகழ்ச்சியானது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது கொள்கைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பமாக காணப்படுமென கூறப்படுகின்றது.

அதன்படி, இதுவரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) , ‘சர்வஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் (P. Ariyanethiran) ஆகியோர் விவாதத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், “தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க உட்பட ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களும் விவாதத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வருகையை உறுதிப்படுத்தவில்லை.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பங்கேற்பது கடினம் என அவருடைய தரப்பினர் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.” என ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.