ஜேர்மனி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: கழிவறையில் கிடந்த காகிதம்
இந்தியாவிலிருந்து ஜேர்மனி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அது புரளி என தெரியவந்தது.
ஜேர்மனி நோக்கி புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
நேற்று வெள்ளிக்கிழமை, இந்தியாவின் மும்பை விமான நிலையத்திலிருந்து, Vistara ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது.
அதில், 234 பயணிகளும், 13 பணியாளர்களும் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
விமானம் வானில் பறந்துகொண்டிருக்கும்போது, விமானத்தின் கழிவறையில், ’விமானத்தில் வெடிகுண்டு உள்ளது’ என எழுதப்பட்ட காகிதம் ஒன்று கிடைத்துள்ளது.
உடனடியாக, விமானம் துருக்கியிலுள்ள Erzurum நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது. அந்நகர அதிகாரிகள் உடனடியாக விமானத்தை சோதனையிட்டுள்ளார்கள்.
புரளி என தெரியவந்தது
சோதனையில், விமானத்தில் சந்தேகத்துக்குரிய எந்த பொருட்களும் கிடைக்கவில்லை.
ஆகவே, வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது.
என்றாலும், Vistara ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகளுக்காக மாற்று விமானம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.