சுவிட்சர்லாந்தில் குறையும் மின்சாரக் கட்டணங்கள்!
சுவிட்சர்லாந்தில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 10 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக மத்திய மின்சார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாதாரண குடும்பம் ஒன்று சராசரியாக 4500 KWH மின்சாரத்தை பயன்படுத்தினால் அந்தக் குடும்பத்தின் கட்டணம் 141 சுவிஸ் பிராங்குகளாக குறையும் எனவும், தற்பொழுது இந்த தொகை 166 சுவிஸ் பிராங்குகளாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மின் கட்டணம் குறைக்கப்படுவதாகவும் சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது