விஜய் கட்சியால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை; அவர்களுக்குதான் சிக்கல் – எச்.ராஜா
விஜய் கட்சியால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை என எச்.ராஜா பேசியுள்ளார்.
விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ள நிலையில் விஜய் எந்த மாதிரியான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க உள்ளார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எச். ராஜா
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக போட்டியிட உள்ள நிலையில் இவர்களின் வருகை எந்த கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா, நீட் தேர்வு ஒழிப்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என திராவிட கட்சிகள் பேசுவதையே விஜய்யும் பேசலாம். விஜய் அப்படி பேசினாலும் பாஜகவுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
ஆனால் திராவிட கொள்கைகளை உடைய தமிழக வெற்றிக் கழகத்தால் அதே திராவிட கொள்கைகளை உடைய சக கட்சிகளின் வாக்குகள் சிதற வாய்ப்பு உள்ளது. திராவிட கொள்கை உடையவர்களால் பாஜகவின் வளர்ச்சியை ஒருபோதும் தடுக்க முடியாது எனக் பேசியுள்ளார்.