;
Athirady Tamil News

அமெரிக்காவில் பனிப் பாறையுடன் மோதிய சொகுசுக் கப்பல்

0

அமெரிக்காவின் (United States) – அலாஸ்கா (Alaska) மாநிலத்திலுள்ள ஜூனோ நகருக்கு தெற்கே, டிரேசி ஆர்ம் ஃப்ஜோர்டு கடல் வழியாக பயணித்த உலகின் மிகப் பெரும் சொகுசு கப்பல்களில் ஒன்றான ‘கார்னிவல் குரூஸ்’ (Carnival Cruise) பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அத்துடன் கப்பலுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கப்பலில் பயணித்த பயணிகள் இந்த தருணத்தை வீடியோ எடுத்து சமூக ஊடகத் தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

டைட்டானிக் கப்பல்
இந்த நிகழ்வானது 1912 ஆம் ஆண்டு பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளான புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் சம்பவத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

பிரித்தானிய (United Kingdom) சொகுசு பயணிகள் கப்பலான டைட்டானிக் 1912 ஏப்ரல் மாதம் அதன் முதல் பயணத்தின் போது, இங்கிலாந்தின் ( England) சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயோர்க் நகருக்கு புறப்பட்டது.

செலும் வழியில் ஒரு பாரிய பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 1,500 பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.