;
Athirady Tamil News

இலங்கையில் அணைத்து பாடசாலைகளும் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படும் : சஜித் உறுதி

0

இலங்கையில் (Sri Lanka) அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 47 ஆவது மக்கள் வெற்றி பேரணி
நேற்று (12) களுத்துறையில் (Kalutara) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி தகவல்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆங்கில மொழிக் கல்வி தகவல் தொழில்நுட்பக் கல்வி என்பனவற்றை மேம்படுத்துவோம்.

இளைஞர்களின் தேர்ச்சி மட்டத்தை அதிகரிப்போம் அதன் ஊடாக தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு நவீன அறிவை வழங்குவோம்.

ரணசிங்க பிரேமதாச (Ranasinghe Premadasa) 200 ஆடை தொழிற்சாலைகள் உருவாக்கி தொழிற்துறையில் ஏற்படுத்திய புரட்சியின் அடுத்த கட்டமாக ஏற்றுமதியையும் அறிவையும் மையமாகக் கொண்ட பொருளாதார விருத்தியை உருவாக்கி மக்களை வலுப்படுத்துவோம்.

காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதோடு வீடுகளையும் அமைத்துக் கொடுத்து வீட்டுக் கனவை நனவாக்குவோம்.

விவசாயத்தையும் மீனவத் தொழிலையும் மேம்படுத்துவதோடு எரிபொருள் நிவாரணத்தையும் பெற்றுக் கொடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.