சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால்..ஆனால் ஒரு நிபந்தனை -நீதிமன்றம் உத்தரவு!
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம் ‘முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது’ என நிபந்தனை விதித்துள்ளது.
கெஜ்ரிவால்..
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, தெலுங்கானா எம்.எல்.சி. கவிதா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைதான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கொடுத்தது. பின்னர் கடந்த ஜூன் அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது.
சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையாகும் நிலையில் திடீரென சி.பி.ஐ. அவரை கைது செய்தது. இந்த சூழலில் தனது கைதுக்கு எதிராகவும், ஜாமீன் கேட்டும் அவர்உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.
நீதிமன்றம் உத்தரவு..
இந்த மனுவை நீதிபதி சூர்யா கந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விசாரணை கடந்த 5-ந்தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.
அந்த நிபந்தனைகளின் விவரம் பின்வருமாறு,
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது.
முதல்வர் அலுவலகத்திற்கு கெஜ்ரிவால் செல்லக்கூடாது.
கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது.
வழக்கு தொடர்பான எந்த சாட்சியுடனும் தொடர்பு கொண்டு பேசக் கூடாது. விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது.