ரணில் யாழில் முன்வைத்த வாக்குறுதிகளுக்கு நானே பொறுப்பு: டக்ளஸ் திட்டவட்டம்
ரணில் விக்ரமசிங்க யாழ். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு நானே பொறுப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு பிரசார கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நான் உங்கள் முன்னால் கூறியவற்றுக்கும் நாமே பொறுப்பாகவும் இருப்போம். அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை.
எதிர்கால வேலைத் திட்டம்
உங்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வேலைத் திட்டங்களை அவர் செய்து காட்டியுள்ளார்.
இதேநேரம் மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
அந்த வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வலுப்படுத்தி அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து பயணிப்பதன் ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து விடுதலைபெற முடியும்” என்றார்.