முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கெஜ்ரிவால் – என்ன காரணம்?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதிவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க துறையால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
பல முறை அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்(13.09.2024) நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
ராஜினாமா
இந்நிலையில், சாட்சிகளுடன் பேச கூடாது. அலுவலகத்துக்கு செல்ல கூடாது என நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தனர்.
இதன் பின் டெல்லி மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நான் சிறையிலிருந்தபோது, ராஜினாமா செய்யவில்லை. இன்னும் 2 நாட்களில் பதவி விலக உள்ளேன். என்னை கைது செய்வதன் மூலம் அச்சுறுத்தி ஆம் ஆத்மி கட்சியை உடைக்க நினைத்தார்கள். நான் அவர்களின் பார்முலாவை தோல்வியடையச் செய்ய விரும்பினேன்.
நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்-மந்திரி நாற்காலியில் அமரமாட்டேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் நினைத்தால் மீண்டும் எனக்கு வாக்களிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.