கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி, பலரைக் காணவில்லை!
கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வெள்ளம்
கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் பரவலாக ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர், அத்துடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை பொலிஸார் உஷார் படுத்தியுள்ளனர்.
இந்த வெள்ள பாதிப்பில் ரோமானியா, செக் குடியரசில் இதுவரை பத்தாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை, தென்மேற்கு போலந்தில் ஒருவர் மூழ்கி இறந்ததாகக் கண்டறியப்பட்டது. ஆஸ்திரியாவில் வெள்ளத்தை எதிர்த்து போராடிய தீயணைப்பு வீரரும் உயிரிழந்தார். மேலும் செக் குடியரசில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
ரோமானியாவின் கிழக்கே உள்ள கலாடியில் சுமார் 5,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
25,000 பேர் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். சில பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு 160 லிட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.