;
Athirady Tamil News

அநுரவின் ஆட்சியில் இரத்துச் செய்யப்படவுள்ள காற்றாலை மின்திட்டம் : வெளியான தகவல்

0

தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் இந்தியாவின் (India) அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்திட்டத்தினை இரத்துசெய்வேன் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் ஊழல் மிகுந்தது, இலங்கையின் நலன்களிற்கு எதிராக செயற்படுகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதானி நிறுவனத்திடம் இருந்து அலகு ஒன்றுக்கு 0.0826 டொலர் என்ற விகிதத்தில் இலங்கை எரிசக்தியை வாங்குகின்ற அதேவேளை இலங்கை நிறுவனம் ஒன்று, 0.0488 டொலருக்கு எரிசக்தியை வழங்குகிறது என்று அநுர குமார குறிப்பிட்டுள்ளார்.

காற்றாலை மின் உற்பத்தி
மேலும் அதானி நிறுவனத்தின் திட்டத்தின் அளவு பெரியது என்பதை கருத்தில் கொள்ளும் போது அதன்செலவீனங்கள் குறைவாக இருக்கவேண்டும், ஆனால் அதற்கு மாறானா நிலை காணப்படுகின்றமையால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை நிச்சயமாக இரத்துச்செய்வோம் என தெரிவித்துள்ளார்.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையின் வடபகுதியில் மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினை முன்னெடுப்பதற்கு 2023 பெப்ரவரியில் இலங்கையின் முதலீட்டு சபை அனுமதி வழங்கியது.

இந்த காற்றாலை திட்டம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன் தற்போது உயர்நீதிமன்ற மதிப்பாய்வில் இந்த சவால்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.