;
Athirady Tamil News

காணாமல் போன 18 வயது இளம் பெண்: ஸ்காட்டிஷ் எல்லையில் கண்டெடுக்கப்பட்ட உடல்

0

காணாமல் போன இளம்பெண் குறித்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது மனித உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இளம் பெண்
காணாமல் போன 18 வயது இளம்பெண் குறித்த தேடுதல் வேட்டையின் போது சந்தேகத்திற்கிடமான மனித உடல் ஸ்காட்டிஷ் எல்லைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரியான்(Rhian) என்று அழைக்கப்படும் கமில் கிம்புட்டீட்(Kamile Gimbutyte) என்ற பெண் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் மெல்ரோஸ் பகுதி(Melrose area) பார்க்கப்பட்டுள்ளார்.

அவர் எயில்டன் மலைப்பகுதியில்(Eildon Hills) நடைப்பயிற்சிக்கு சென்றதாக நம்பப்படுகிறது.

இதையடுத்து திங்கட்கிழமை காலை ஸ்காட்லாந்து பொலிஸார் தேடுதல் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட உடல்

இந்நிலையில் எயில்டன் மலைப்பகுதியில் மனித உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணுதல் இன்னும் முறையாக நடைபெறவில்லை, இருப்பினும் உறவினர்களுக்கு இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து பொலிஸ் செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை சுற்றி சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.