;
Athirady Tamil News

சர்வதேச மாணவர்களை மோசமாக நடத்திய பிரித்தானியா: சிக்கலில் பல்கலைக்கழகங்கள்

0

தங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு வாரி வழங்கிய சர்வதேச மாணவர்களை தொடர்ந்து அவமதித்துவந்தது பிரித்தானியா.

அவர்களுக்கு விதித்த கடும் கட்டுப்பாடுகள் காரணமாக, பிரித்தானியாவுக்கு டாட்டா பை பை சொல்லிவிட்டு, வேறு நாடுகளுக்குப் படிக்கச் சென்றுவிட்டார்கள் சர்வதேச மாணவர்கள்.

இப்போது, கடும் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன, பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்!

141 பல்கலைக்கழகங்கள் அரசுக்கு கோரிக்கை
இங்கிலாந்திலுள்ள 141 பல்கலைக்கழகங்கள், மாணவர்களின் கல்விக்கட்டணத்தை உயர்த்துவதுடன், அரசும் நிதி உதவி செய்தாலன்றி, கல்வித்துறை வீழ்ச்சியை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கமுடியாது என்று கூறியுள்ளன.

இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள பிரித்தானிய மாணவ மாணவியரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், உள்ளூர் மாணவர்களைவிட பல மடங்கு கல்விக்கட்டணம் செலுத்தும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையோ கணிசமாக குறைந்துவிட்டது.

ஆகவே, பிரித்தானிய மாணவ மாணவியர் செலுத்தும் கல்விக்கட்டணத்தை அதிகரித்தே ஆகவேண்டிய சூழலும், அரசு நிதியுதவி வழங்கியே ஆகவேண்டும் என்னும் நிலையும் உருவாகியுள்ளது.

ஆனால், அவ்வளவு கல்விக்கட்டணம் செலுத்தவேண்டுமா என பிரித்தானிய பிள்ளைகள் யோசிக்கத் துவங்கிவிட்டார்கள்.

கல்விக்கட்டணத்துக்காக வேலை பார்த்துவந்த சில மாணவர்கள், அந்தத் தொகை தாங்கள் ஏற்கனவே படிக்கும் கல்விப்பிரிவில் தொடர்ந்து படிப்பதற்கான கல்விக்கட்டணம் செலுத்த போதுமானதாக இருக்காது என்பதால், வேறு கல்விப்பிரிவை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளார்கள்.

ஆக, கூடுதல் கட்டணம் செலுத்தியும், சர்வதேச மாணவர்களை மோசமாக நடத்தியதின் பலனை பிரித்தானியா அனுபவிக்கத் துவங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.