;
Athirady Tamil News

தேர்தல் அலுவலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களின் செயற்பாட்டு நேர வரம்புகளை விபரிக்கும் அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, தொகுதி அளவில் அறிவிக்கப்பட்ட கிளை தேர்தல் அலுவலகங்களின் செயற்பாடு இன்று (19) நள்ளிரவுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியின் மட்டத்திலும் நிறுவப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் நாளை (20) முதல் செயற்படத் தொடங்குவதுடன் செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை பராமரிக்கப்படும்.

தேர்தல் அலுவலகங்கள்
அதேபோல், தொகுதி அளவிலான தேர்தல் அலுவலகங்கள் செயற்படுவதற்கான கால அவகாசமும் செப்டெம்பர் 22ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.

மேலும், செப்டம்பர் 22ஆம் திகதி நள்ளிரவில் இருந்து, ஜனாதிபதி வேட்பாளர்களோ அல்லது அவர்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளோ தங்கள் வீடுகளை தேர்தல் அலுவலகங்களாக பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடுவிற்கு அப்பால் செயற்படும் தேர்தல் அலுவலகங்கள் தேர்தல் சட்டத்தின்படி உடனடியாக அகற்றப்படும் என தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.