;
Athirady Tamil News

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் ஊழியர் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

0

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு அட்டைகள் விநியோகம் 94 வீதம் முடிவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் ஜனாதிபதி தேர்தலான எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் வரை தபால் நிலையங்களில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காத தபால் உத்தியோகத்தர்
இந்த நிலையில் பெருமளவு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் தன்வசம் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

களுத்துறை(kalutara) பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சுமார் 900 வாக்காளர் அட்டைகளை அவர் விநியோகிக்காமல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

களுத்துறை பிரதான தபால் நிலையத்தில் கிடந்த வாக்காளர் அட்டைகள்
இதனையடுத்து அவரை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு தபால் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அவரிடமிருந்து மீட்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் நேற்று (18) களுத்துறை பிரதான தபால் நிலையத்திலிருந்து பயாகல உப தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.இவ்வாறு கிடைக்கப்பெற்ற வாக்காளர் அட்டைகளுக்குரியவர்கள் அதனை வந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.