;
Athirady Tamil News

வாக்களிப்பு நிலையங்களில் கடும் பொலிஸ் பாதுகாப்பு!

0

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் தலா 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.