;
Athirady Tamil News

புதிய தொழில்நுட்ப விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மேற்காசிய நாடு!

0

வெளிநாட்டு தொழில் முனைவோரை ஈர்க்கும் புதிய தொழில்நுட்ப விசா திட்டத்தை துருக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியைத் தொடர்ந்து பெருக்குவது குறிக்கோளாகக் கொண்டு புதிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

துருக்கியின் தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மெஹ்மெட் ஃபாதிஹ் காசிர் இந்த புதிய திட்டத்தை அறிவித்தார்.

இதன் மூலம், துருக்கியில் தொழில்கள் தொடங்கும் வெளிநாட்டுப் பொதுமக்களுக்கு 3 ஆண்டுகள் வரை விரைவான வேலை அனுமதி வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் வரி சலுகைகள், வழிகாட்டுதல், சுகாதார காப்பீடு மற்றும் நவீன மையங்களுக்கான அணுகல் போன்ற பல்வேறு நன்மைகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி அரசு இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தி, புதுமை சார்ந்த பரந்தகட்டமைப்பை உருவாக்குவதற்கும், நாட்டின் மூளை உறிஞ்சும் பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீபத்திய காலங்களில், நாட்டின் பொருளாதார சிக்கல்களால் ஐரோப்பாவில் புதிய வேலை வாய்ப்புகளை நாடும் பலர், குறிப்பாக வைத்தியர்கள் மற்றும் பொறியாளர்கள், துருக்கியை விட்டு வெளியேறியுள்ளனர்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
இந்த விசா திட்டம் தொழில் முனைவோருக்கு 6 மாதங்கள் சட்ட, நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்குகிறது.
இந்த விசா மூலம் அவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான அனைத்து விதிமுறைகளும் விரைவாக பெறமுடியும்.
அரசு இந்த திட்டத்தின் மூலம் துருக்கியை உலக அளவில் தொழில்நுட்ப முதலீடுகளுக்கான மையமாக மாற்ற முயற்சிக்கிறது.

அங்காராவில் உள்ள தொழில் முனைவோர் தெகின் கஹ்ரமான் துருக்கியின் பாதுகாப்பு, விமானம், விண்வெளி மற்றும் நிதியியல் துறைகளில் அதிகம் வாய்ப்புகள் இருப்பதாகவும், வெளிநாட்டு தொழில் முனைவோர் துருக்கியில் உள்ள உள்ளூர் நிபுணர்களுடன் இணைந்து புதிய தொழில்களை உருவாக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் 100,000 தொழில்நுட்ப சார்ந்த தொடக்க நிறுவனங்களை உருவாக்குவது துருக்கி அரசின் குறிக்கோளாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.