யாழில் 37 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 37 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.