;
Athirady Tamil News

ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன்; ஜனாதிபதி அனுர

0

இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதன் பின்னர் ஜனாதிபதி அனுர உரையாற்றுகையில்,

ஜனநாயகத்தை முறையாகப் பாதுகாப்பேன்
அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவேன் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.

தேர்தலை நடத்துவதும் அரச தலைவரைத் தெரிவு செய்வதும் மாத்திரம் ஜனநாயகமல்ல. எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாகப் பாதுகாப்பேன். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கின்றேன்.

சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ளேன். அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம்.

மேலும் நாடு என்ற ரீதியில் தனித்துச் செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவேன் என்றும் இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.