;
Athirady Tamil News

வீட்டுக்கு வெளியே எச்சில் துப்பிய நபர்… 36 ஆண்டுகள் முந்தைய கொலை வழக்கில் சிக்கிய பரிதாபம்

0

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் பல ஆண்டுகளாக துப்புத்துலங்காத கொலை வழக்கு ஒன்று, ஒருவர் வீட்டுக்கு வெளியே எச்சில் துப்பியதால் முடிவுக்கு வந்துள்ளது.

உறுதி செய்ய முடியாமல்
பாஸ்டன் பகுதியில் கடந்த 1988ல் கரேன் டெய்லர் என்ற இளம் தாயார் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது ஜேம்ஸ் ஹோலோமன் என்பவர் கைதாகியுள்ளார். கொலை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட DNA ஆதாரங்கள், தற்போது கைதான நபருடன் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சம்பவத்தன்றே டெய்லரின் உடல் அருகே ஹோலோமன் காணப்பட்டதற்கான அடையாளங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். ஆனால் உறுதி செய்ய முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் ஹோலோமன் எச்சில் துப்ப, அதில் இருந்து DNA ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். மேலும் டெய்லரின் விரல் நகங்களில் காணப்பட்ட மாதிரிகளும் தற்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளையும் அதிகாரிகள் ஒப்பிட்டு உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்தே அவர் கைதாகியுள்ளார். இதுவரை குற்றவியல் நடவடிக்கைகளில் எதுவும் ஈடுபட்டிராத ஹோலோமன் செப்டம்பர் 19ம் திகதி கைதாகியுள்ளார். 1988 மே மாதம் தமது குடியிருப்பில் 25 வயதேயான டெய்லர் சடலமாக காணப்பட்டார்.

15 முறை கத்தியால்
டெய்லரின் தாயார் தொலைபேசியில் தொடர்புகொள்ள, 3 வயது மகள் பதிலளித்துள்ளார். மேலும், தாயார் தூக்கத்தில் இருப்பதாகவும் அவரை எழுப்ப முடியவில்லை என்றும் குழந்தை பதிலளித்துள்ளது.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் டெய்லரின் குடியிருப்புக்கு விரைந்த அந்த தாயாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உடற்கூறு ஆய்வில், டெய்லர் 15 முறை கத்தியால் மார்பில், தலையில் மற்றும் கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.