;
Athirady Tamil News

ஜேர்மனியில் தொடரும் குண்டு வெடிப்புகள்: ஒரே மாதத்தில் மூன்றாவது சம்பவம்

0

ஜேர்மன் நரமொன்றில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழும் விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் குண்டு வெடிப்புகள்
ஜேர்மன் நகரமான கொலோனில் கடந்த வாரம் மூன்று நாட்கள் வித்தியாசத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

கொலோன் நகரின் சிற்றி சென்றரில் அந்த இரண்டு குண்டு வெடிப்புகளும் நிகழ்ந்தன.

இந்நிலையில், நேற்று மீண்டும் கொலோன் நகரிலுள்ள காபி ஷாப் ஒன்றில் அதிகாலை 3.00 மணியளவில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

அந்தக் காபி ஷாப் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் உள்ள நிலையில், குண்டு வெடித்ததும், உடனடியாக தீ பரவியுள்ளது.

உடனடியாக, அந்த குடியிருப்பில் வாழ்ந்துவரும் 20 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு பேருக்கு புகையை சுவாசித்ததால் பாதிப்பு ஏற்படவே, அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்த நபர்

இந்த சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரத்துக்குள், தனது சட்டத்தரணியுடன் வந்த ஒருவர், பொலிசில் சரணடைந்துள்ளார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டபின் பொலிசார் அவரை விடுவித்துள்ளனர். சந்தேக நபர் என கருதப்படும் இரண்டாவது நபர் ஒருவரை பொலிசார் தற்போது தேடிவருகிறார்கள்.

இதற்கிடையில், முதற்கட்ட விசாரணையில், முன்பு நிகழ்ந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.