;
Athirady Tamil News

புலம்பெயர்ந்த நபர் செய்த பயங்கர செயல்: பிரான்ஸ் அரசியலில் சர்ச்சை

0

பிரான்சில் சனிக்கிழமையன்று இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்ததாக புலம்பெயர்ந்தோர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில், Paris-Dauphine பல்கலைக்கழக மாணவியான Philippine (19) என்னும் இளம்பெண், வனப்பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவரைக் கொலை செய்ததாக மொராக்கோ நாட்டவரான ஒருவர் சுவிட்சர்லாந்தில் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் ஏற்கனவே பெண்களுக்கெதிரான மோசமான குற்றம் ஒன்றில் ஈடுபட்டு சிறை சென்றவர். நாட்டை விட்டு வெளியேற்றப்பட இருந்த அவர் சட்டவிரோதமாக பிரான்சில் வாழ்ந்துவந்துள்ளார்.

பிரான்ஸ் அரசியலில் சர்ச்சை
குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் புலம்பெயர்ந்தோர் என்பதை காரணமாக காட்டி, புதிய அரசு, புலம்பெயர்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கடினமான முடிவெடுக்கவேண்டும் என National Rally கட்சி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், அப்படி அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமர் மிஷெல் பார்னியேர் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவதாகவும் National Rally கட்சித் தலைவரான ஜோர்டன் பார்டெல்லா எச்சரித்துள்ளார்.

ஆனால், கிரீன்ஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Sandrine Rousseau என்பவர், வலதுசாரியினர் தங்கள் இனவெறுப்பை பரப்புவதற்காக இந்த கொலை வழக்கைப் பயன்படுத்திக்கொள்வதாக விமர்சித்துள்ளார்.

ஆக, அந்த இளம்பெண் கொலை வழக்கில் குற்றவாளி புலம்பெயர்ந்தோர் என்பதால், அந்த விடயம் பிரான்சில் அரசியலாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.