;
Athirady Tamil News

உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார்.., சீமான் கிண்டல்

0

திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க பவன் கல்யாண் விரதம் இருந்து வருகிறார்.

கார்த்தி – பவன் கல்யாண் சர்ச்சை
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது நடிகர் கார்த்தியிடம் உங்களுக்கு லட்டு வேணுமா? என தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு அவர், “லட்டு குறித்து நாம் இங்கு பேச வேண்டாம். அது உணர்ச்சிமிகுந்த விடயம். லட்டு வேண்டாம், தவிர்த்துவிடுவோம்” என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், “சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டுவை உணர்ச்சிமிக்க விடயம் என்று சொல்லாதீர்கள். நான் நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன்.

சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்து பேச வேண்டும்” என்றார். இந்த விவாகரம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பேசப்பட்டது.

பின்பு நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அன்புள்ள பவன் கல்யாண் சார். உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். நான் பேசியது எதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்” என்றார்.

இதனிடையே, லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க அம்மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யான் 11 நாள் விரதம் இருந்து வருகிறார். அவர் கோவிலின் படிக்கட்டுகளை சுத்தம் செய்யும் வீடியோக்களும் பரவி வருகின்றன.

சீமான் பேசியது
இந்நிலையில், கார்த்தி – பவன் கல்யாண் விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “நடிகர் கார்த்தியின் லட்டு குறித்த கேள்வியை நெறியாளர் கேட்டிருக்க கூடாது. ஆனாலும், அதற்கு அவர் நாகரிகமாக பதில் சொல்கிறார்.

இதற்கு பவன் கல்யாண கோவப்படுவதில் அர்த்தமில்லை. உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார்” என்று கிண்டலடிக்கும் வகையில் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.