;
Athirady Tamil News

குவியம் விருதுகள் 2024

0

இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான விருது விழாவான “குவியம் விருதுகள் 2024” நிகழ்வு நாளை சனிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகி, பல கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற காத்திருக்கின்றன.

விருது விழாவில் , முழு நீள திரைப்படங்கள் , ஆவணப்படங்கள் , குறும்படங்கள் மற்றும் காணொளிப்பாடல்களுக்காக விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதற்கமைய கிடைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான படைப்புக்களில் இருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் விழா மேடையில் அறிவிக்கப்படவுள்ளதுடன் விருதுகளும் வழங்கிவைக்கப்படவுள்ளன.

அதேவேளை ஈழத்து முதுபெரும் இசை கலைஞர் கலைவாணர் கண்ணன் மாஸ்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

அத்துடன் ஈழ தமிழர்களுக்கு உலகெங்கும் பெருமை தேடித்தந்த ஈழத்துக் குயில் என அழைக்கப்படும் பிரபல பாடகி கில்மிஷாவிற்கும் கௌரவிப்பும் விருதும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

மூன்றாவது தடவையாக இடம்பெறவுள்ள குவியம் விருதுகள் நிகழ்வில் மேலும் பல சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.