பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்.. துடித்துடித்து உயிரிழந்த 4 பள்ளி மாணவர்கள் -பின்னணி என்ன?
விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்தது.
மினி பஸ்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் 40 பயணிகளுடன் சென்ற மினி பேருந்து சாலையின் வளைவில் திரும்பிய போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் நிதிஷ் குமார்(17), வாசுராஜ் (15), கல்லூரி மாணவர் சதீஷ் குமார் (20), தனியார் கல்லூரி ஊழியர் மாடசாமி (28) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்து
மேலும், விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கோர விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்தது.இதனிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் பள்ளி நேரங்களான காலை மாலை இரு வேளைகளிலும்,
கூடுதல் பேருந்து இயக்கக் கோரியும் மம்சாபுரம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலையை அகலப்படுத்தக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.