50 நாடுகள் இணைந்து ஜேர்மனியில் சந்திப்பு: அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு
உக்ரைன் ஆதரவு நாடுகளான 50 நாடுகள் இணைந்து பங்கேற்கும் சந்திப்பு ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
அவற்றில் ஒரு நடவடிக்கையாக, உக்ரைன் ஆதரவு நாடுகளான 50 நாடுகள் ஜேர்மனியில் அடுத்த மாதம் சந்திக்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், உக்ரைனுக்கு அளித்துவரும் நிதி மற்றும் ஆயுத உதவிகளை அதிகரிக்க இருப்பதாகவும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ஜோ பைடனின் இந்த அறிவுப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
I am grateful to @POTUS Joe Biden, U.S. Congress and its both parties, Republicans and Democrats, as well as the entire American people for today’s announcement of major U.S. defense assistance for Ukraine totalling $7.9 billion and sanctions against Russia.
On behalf of the…
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) September 26, 2024