;
Athirady Tamil News

சிறார்களுக்கென கொண்டாடப்பட்ட விழாவில் துயரம்… சடலமாக மீட்கப்பட்ட 46 பேர்கள்

0

கிழக்கு இந்தியாவின் பீகாரில் சிறார்களுக்காக கொண்டாடப்பட்ட மத விழா ஒன்றில் 37 சிறார்கள் உடொஅட 46 பேர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடங்கு முறையில் குளித்தபோது

கடந்த 24 மணி நேரத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெருக்கெடுத்த ஆறுகள் மற்றும் குளங்களில் சடங்கு முறையில் குளித்தபோது மரணம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

மூன்று நாட்கள் முன்னெடுக்கப்படும் ஜிவித்புத்ரிகா விழாவானது ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகக் கொண்டாடுகிறது. பீகார் மாநில அதிகாரிகள் தெரிவிக்கையில், விழாவைக் கொண்டாடுவதற்காக பலர் நதிகளில் ஆபத்தான நீர் நிலைகளை புறக்கணித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

அதிக மக்கள் கூடும் போது

மேலும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கடந்த காலங்களில் பெரிய திருவிழாக்களின் போது, ​​பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காமல், நெரிசலான இடங்களில் அதிக மக்கள் கூடும் போது, ​​மோசமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

கடந்த ஜூலை மாதம், வடக்கு உத்தரபிரதேசத்தில் மதக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 121 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.