ஹசன் நஸ்ரல்லா படுகொலை : பைடன் வெளியிட்ட அறிவிப்பு
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா(Hassan Nasrallah) கொல்லப்பட்டதை, “அவரால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைத்ததற்கான நடவடிக்கை” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) வர்ணித்துள்ளார்.
இவர்களில் “ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் லெபனான் குடிமக்கள்” உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது
ஹிஸ்புல்லா, ஹமாஸ், யேமனின் ஹூவுதிகள் மற்றும் “மற்ற ஈரானிய ஆதரவு பயங்கரவாதக் குழுவிற்கு” எதிராக தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின்(israel) உரிமையை அமெரிக்கா “முழுமையாக ஆதரிக்கிறது” என்று பைன் வலியுறுத்தினார்.
“ஆக்கிரமிப்பைத் தடுக்க” மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவப் படைகளின் பாதுகாப்பு நிலையை அதிகரிக்க பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
இறுதியில் எங்கள் நோக்கம் என்ன..!
“இறுதியில், காசா மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளிலும் நிலவும் மோதல்களை இராஜதந்திர வழிமுறைகள் மூலம் தணிப்பதே எங்கள் நோக்கம்” என்று அமெரிக்க ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.