நான்கு மகள்களுக்கு விஷம் கொடுத்த தந்தை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஏற்பட்டுள்ள துயர முடிவு
இந்திய தலைநகர் புது டில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு மகள்களுக்கு விஷம் கொடுத்த தந்தை?
டில்லியிலுள்ள Rangpuri என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில், ஹீராலால் ஷர்மா (Heeralal Sharma, 46) என்பவர் தன் மனைவி மற்றும் Neetu (26), Nikki (24), Neeru (23), மற்றும் Nidhi (20) என்னும் நான்கு மகள்களுடன் எட்டு ஆண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளார்.
சில நாட்களாக அந்த வீட்டில் கதவு திறக்கப்படாமலே இருந்த நிலையில், நேற்று அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து அந்த வீட்டுக்குச் சென்றதாக தெரிவிக்கும் பொலிசார், அந்த வீட்டின் ஒரு அறையில் ஹீராலால் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்றொரு அறையில் அவரது நான்கு மகள்களும் உயிரற்ற நிலையில் கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஹீராலால், தன் நான்கு மகள்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தியிருக்கலாம் என்று பொலிசார் கருதுகிறார்கள்.
மரவேலை செய்துவந்த ஹீராலாலின் மனைவி சில வாரங்களுக்கு முன்புதான் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
அந்த மகள்களோ, நால்வருமே உடற்குறைபாடு கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்.
மனைவியும் இல்லாமல், தனி ஆளாக குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு, பிள்ளைகள் நால்வரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செலவதிலேயே தனது பெரும்பாலான நேரத்தையும் செலவிட்டுள்ளார் ஹீராலால்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.