உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளும் வெள்ளரிக்காய்- தினமும் எவ்வளவு சாப்பிடலாம்?
பொதுவாக உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குவதில் காய்கறிகள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் தினமும் நாம் சாப்பிடும் உணவுடன் கண்டிப்பாக ஒரு சாலட் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். இது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் நீர்ச்சத்தை வழங்குகின்றது.
சாலட் என்று பார்க்கும் போது அதில் கண்டிப்பாக வெள்ளரிக்காய் இருக்கும்.
இப்படி சேர்க்கப்படும் வெள்ளரிக்காயில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் கே, வைட்டமின் ஏ, நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், பீட்டா கரோட்டின், வைட்டமின் பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
இது மனிதர்களுக்கு ஏற்படும் ஏகப்பட்ட உடல் வியாதிக்கு மருந்தாக பயன்படுகின்றது.
அந்த வகையில் வெள்ளரிக்காய் சாலட்டில் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்
1. வெள்ளரிக்காயில் உள்ள ஃபிளாவனாய்டுகள், லிக்னான்கள் மற்றும் ட்ரைடர்பீன்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மனித உடலில் இருக்கும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றது. அத்துடன் வெள்ளரியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும் வேலைச் செய்கின்றது.
2. வெள்ளரிக்காயில் 95 சதவீதம் நீர்ச்சத்து தான் இருக்கின்றது. இதனை சாலட்டுடன் சாப்பிடும் பொழுது உடலை நீரேற்றமாக வைத்து கொள்ளும், உடலில் இருக்கும் நச்சுத்தன்மை அகற்றவும் உதவியாக இருக்கும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடலாம். இது அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது.
3. சிலர் சரும பாதிப்புகளால் அதிகமாக அவஸ்தைப்படுவார்கள். இப்படியான பிரச்சினையிருப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். இது அதிக அளவு பாந்தோத்தேனிக் அமிலம் அல்லது வைட்டமின் பி5 பெற்று தரும். இப்படி கிடைக்கும் சத்துக்கள் முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்று தருகின்றது.
4. வெள்ளரிக்காயில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கும். இந்த வயிற்றில் இருக்கும் குடல் இயக்கத்திற்கு உதவியாக இருக்கின்றது. மலச்சிக்கல் பிரச்சினையில் இருப்பவர்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.வெள்ளரிக்காயில் இருக்கும் நீரேற்றம் மலத்தின் நிலைத்தன்மையில் மாற்றம் செய்து மலத்தை இலகுவாக வெளியேற்றுகின்றது.
5. உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் தண்ணீர் குடிக்கலாம். இது உங்களின் உடல் எடையை குறைக்கும் வேலையை செய்கின்றது. ஏனெனின் வெள்ளரியில் கலோரிகள் குறைவாக இருக்கும். அத்துடன் அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் கரையக்கூடியதாக இருக்கும். இதனால் பசி ஏற்படுவது குறைவாக இருக்கும்.