;
Athirady Tamil News

தாய்லாந்தில் விபத்துக்குள்ளான பள்ளி பேருந்து: கேள்விக்குறியாகியுள்ள 20 குழந்தைகளின் உயிர்!

0

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் வரை உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பேருந்து விபத்து
தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதை அடுத்து, அதில் பலர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

பள்ளிப் பயணத்திலிருந்து திரும்பி வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டயர் பஞ்சர் காரணமாக தடுப்புகள் மீது மோதி நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்தது.

அதிகாரிகள் கூறுகையில், 22 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இன்னும் கணக்கில் இல்லை என்றும், 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் தப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பேருந்தில் தீப்பற்றியதால் மீட்புப் பணியாளர்கள் பேருந்தின் உட்புறத்தை அணுக முடியவில்லை. இருப்பினும் தப்பியவர்களில் எட்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் கோரிக்கை
இந்நிலையில் பள்ளி பேருந்து அழுத்தப்பட்ட இயற்கை வாயு மூலம் இயக்கப்பட்டுள்ளது என்றும், இது “மிகவும் ஆபத்தானது” என்றும் போக்குவரத்து அமைச்சர் uriyahe Juangroongruangkit தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகள் வாகனங்களில் இந்த வகை எரிபொருளைப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் Paetongtarn Shinawatra, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.