;
Athirady Tamil News

மலையில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் – 56 ஆண்டுகளுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு!

0

இமாச்சலப்பிரதேச மலைப்பகுதியில் 1968 விமான விபத்தில் பலியான 4 உடல்கள் கிடைத்துள்ளன.

இமாச்சல்
1968- ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி சண்டிகரிலிருந்து லே லடாக்குக்கு இந்திய ராணுவத்தின் ஏஎன்-12 வகை விமானம் பயணித்தது. அந்த விமானத்தில் மொத்தம் 102 பேர் பயணித்த போது ரோத்தங் பாஸ் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்திலிருந்த 102 பயணிகளும் காணாமல் போயினர். மேலும் பலியானதாகக் கருதப்பட்ட பலரது உடல்களும் உடனடியாக மீட்கப்படவில்லை. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி 2003ஆம் ஆண்டு தொடங்கியது.

அப்போது எச்சங்கள் கண்டறியப்பட்ட நிலையில் தேடுதல் பணிகள் இன்னும் இந்திய ராணுவம் தொடர்ந்து வருகிறது கடந்த 2019 -ல் 5 உடல்கள் சிதைந்து அழுகிய நிலையில் கிடைத்த நிலையில் தற்போது மீண்டும் மீட்புப் பணி துவங்கியது.

விமான விபத்து
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 25-ல் துவங்கிய இந்த மீட்புப் பணி இந்த மாதம் அக்டோபர் 10ம் தேதி வரை தொடர உள்ளது. இதில் இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட் பிரிவுடன் இணைந்து திரங்கா மவுண்டன் ரெஸ்க்யு குழு இனைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் செப்டம்பர் 29 ஆம் தேதி இக்குழுவினருக்கு சந்திரபகா எனும் பனி மலைப்பகுதியில் 1968 விமான விபத்தில் பலியான 4 உடல்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து இந்த உடல்களில் மூன்று அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் மிகவும் நீண்ட தேடுதல் வேட்டையாக இந்த மீட்பு கருதப்படுகிறது. மேலும் இந்தியாவின் இந்த மிக நீண்டகால தேடுதல் பணியில் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.