;
Athirady Tamil News

தடை விதித்த இஸ்ரேல்… உடனடியாக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா. தலைவர்

0

இஸ்ரேலுக்குள் நுழைய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு அந்த நாடு தடை விதித்த நிலையில், உடனடியாக ஈரான் முன்னெடுத்த தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான வன்முறை சம்பவங்கள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய António Guterres, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதிலுக்கு பதில் என்ற ஆபத்தான வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.

ஆனால், முன்னதாக இஸ்ரேல் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த António Guterres-ஐ ஆளுமை அற்றவர், இஸ்ரேலின் நலன்களுக்கு எதிரானவர் என இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்திருந்தார்.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறார் என்றும் இஸ்ரேல் காட்டமாக விமர்சித்திருந்தது. உண்மையில் போர் நிறுத்தம் கோரி அறிக்கை வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், தமது அறிக்கையில் ஈரான் தாக்குதலை குறிப்பிடவில்லை.

துன்பத்தை குறைக்கும் என்றோ

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய António Guterres, ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஈரான் முன்னெடுத்த தாக்குதலை தாம் கண்டித்ததாகவும், அதேப்போன்று, இஸ்ரேல் மீது ஈரான் முன்னெடுத்துள்ள ஏவுகணை தாக்குதலையும் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள் பாலஸ்தீனிய மக்களின் நீண்டகால கோரிக்கைகளை ஆதரிப்பதாகவோ அல்லது அவர்களின் துன்பத்தை குறைக்கும் என்றோ தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் கொடுஞ்செயல்களையும் அவர் விமர்சித்துள்ளார். காஸாவில் இஸ்ரேல் இராணுவம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது ஐ.நா பொதுச்செயலாளராக இருக்கும் இந்த ஆண்டுகளில் நடந்த மிகவும் கொடிய மற்றும் அழிவுகரமான இராணுவ நடவடிக்கை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.