;
Athirady Tamil News

உர மானிய கொடுப்பனவு நிறுத்தம் : விவசாயிகள் விசனம்

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anurakumara Dissanayake) உர மானிய கொடுப்பனவு தொடர்பில் வழங்கிய உறுதிமொழியை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் (Election Commission) அறிவித்துள்ளமை தொடர்பில் அதிருப்தி அடைவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய அதிகாரசபையின் மாவட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குறித்த அமைப்பினர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஹெக்டயருக்கு 15,000 ரூபாயாக இருந்த எங்களுடைய உர மானிய கொடுப்பனவை 25000 ரூபாவாக உடனடியாக வழங்குமாறு பணித்ததையடுத்து விவசாயிகள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்திலேயே இருந்தனர்.

தேர்தலுக்கான அறிவிப்பு

ஆனால் இதனை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கின்றது எனவே இதனை அரசியலாகப் பார்க்காது விவசாய மக்களினுடைய நலனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இதனை திரும்ப வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.

அத்தோடு, ஜனாதிபதி கடந்த சில நாட்கள் சிறந்த சில நடவடிக்கைகளை எமது நாட்டிலும் அரசியலிலும் மேற்கொண்டு வருவது எமது விவசாயிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் சந்தோஷத்தினை அளிக்கின்றது.

எனினும், ஒரு சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தேர்தல் ஆணையாளர் இவ்வாறான சில கொடுப்பனவுகளை தற்போது மேற்கொள்ள முடியாது எனக்கூறி ஒரு உத்தரவிட்டிருந்தார்” என சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.