;
Athirady Tamil News

மும்முரமாகும் போர்ச்சூழல்… பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை

0

மத்திய கிழக்கு பகுதியில் மும்முரமாகிவரும் போர்ச்சூழல் காரணமாக, எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய சாரதிகள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

மும்முரமாகும் போர்ச்சூழல்…
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் தாக்குதலில் ஈடுபட, தற்போடு ஈரானே நேரடியாக தாக்குதலில் இறங்கியுள்ளது.

ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகள் களத்தில் குதிக்குமானால், பெரிய அளவில் போர் வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.

பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை
விடயம் என்னவென்றால், எங்கோ யாருக்கோ சண்டை என யாரும் கவலைப்படாமல் இருக்கமுடியாது. காரணம், எங்கு போர் வெடித்தாலும் அது உலகின் பொருளாதாரத்தை பாதிக்கும்.

உதாரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நேரத்தில், பல நாடுகளில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

அதேபோல, தற்போது இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக முக்கியமான பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.

அது, எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்! ஆம், இரண்டு நாட்களில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு சுமார் 5 சதவிகிதம் அதிகரித்து, 76 டொலர் வரை ஏற்கனவே அதிகரித்தாயிற்று.

அது 100 டொலர்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பிரித்தானிய சாரதிகள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.