;
Athirady Tamil News

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கும் மற்றொரு நேட்டோ நாடு

0

இஸ்ரேல் ஈரான் மோதல் மும்முரமாகிவரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகள் களத்தில் குதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, இஸ்ரேலுக்கு ஆதரவாக, அதன் நட்பு நாடுகளும் களமிறங்க முடிவு செய்துள்ளன.

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கும் மற்றொரு நேட்டோ நாடு
https://www.youtube.com/watch?v=cpsjEMhPhpw

அமெரிக்கா போர்க்கப்பல் ஒன்றை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளதுடன், மற்றொரு கப்பலையும், கூடுதல் படைகளையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாடும் இஸ்ரேலுக்கு ஆதரவான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

ஏற்கனவே போர்க்கப்பல் ஒன்றை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ள பிரான்ஸ், ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, தற்போது கூடுதல் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.