;
Athirady Tamil News

தவெக மாநாடு: விக்கிரவாண்டியில் இன்று அதிகாலை பூமி பூஜை!

0

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியும் காவல்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் இன்று(அக். 4) அதிகாலை நடைபெற்றது.

தவெக முதல் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை அக்கட்சியின் மாநில பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கோயில்களிலிருந்து புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு பூமி பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.