ஜனாதிபதி தேர்தலின் போது இடைநிறுத்தப்பட்டிருந்த உரம் – எரிபொருள் மானியம் : வெளியான தகவல்
ஜனாதிபதி தேர்தலின் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெரும்போக பருவத்திற்கான உர மானியம், கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை மீள வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், குறித்த மானியங்கள் செப்டெம்பர் மாத நிலுவைத் தொகையுடன் ஒக்டோபரில் வழங்கப்படவுள்ளன.
பொதுத் தேர்தல்
அத்தோடு, பொதுத் தேர்தல் முடியும் வரை உரம் மற்றும் எரிபொருள் மானியம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) அறிவித்திருந்தது.
இந்தநிலையில், இது தொடர்பான கடிதங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மற்றும் விசாரணைகளுக்கான துணை தேர்தல் ஆணையர் பி.பி.சி.குலரத்ன (B.P.C. Kularatne) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.