;
Athirady Tamil News

ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

0

இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று கூறியுள்ள துறைசார் நிபுணர்கள், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்கள்.

அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம்

இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம் என்கிறார் Institute for Science and International Security என்னும் அமைப்பின் நிறுவனரான டேவிட் (David Albright) என்னும் அறிவியலாளர்.

இஸ்ரேல் லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீது மீது தரைவழித் தாக்குதலை துவக்கியுள்ளது.

அதேபோல, பெரிய பின்விளைவுகள் எதையும் எதிர்கொள்ளாமல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம் என்கிறார் அவர்.

காரணம் இதுதான்
அதாவது, ஈரான் சில மாதங்களுக்குள் வேகமாக அணு குண்டு ஒன்றைத் தயாரிக்க முயற்சிக்கக்கூடும்.

ஆகவே, ஈரான் அணு குண்டு தயாரிப்பதற்குள் இஸ்ரேல் ஈரானின் அணு அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்திவிடவேண்டும் என்கிறார் டேவிட்.

அப்படி இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லையென்றால், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும். அதனால் உலகின் முடிவுக்கு வழிவகுக்கும் அணு ஆயுதப் போர் துவங்கும் அபாயம் நேரிடக்கூடும் என எச்சரிக்கிறார் டேவிட்.

அதேபோல, மத்திய கிழக்கு நாடுகள் நிபுணரான Kasra Aarabi என்பவரும், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதைப் பார்க்கும்போது, அது இஸ்ரேல் மீது அணு ஆயுதம் வீசவும் தயங்காது என்றே தோன்றுகிறது என்கிறார்.

ஆகவே, ஈரானில் யுரேனியம் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் Natanz மற்றும் Fordow ஆகிய இடங்களை இஸ்ரேல் தாக்குவது சரியானதாகத்தான் இருக்கும் என்கிறார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.