;
Athirady Tamil News

பிரித்தானியாவிற்கு புதிய அச்சுறுத்தல்., லண்டனில் காணப்படும் ஆபத்தான பூச்சிகள்

0

18 ஆண்டுகளில் முதல் முறையாக பிரித்தானியாவிற்குள் ஆபத்தான கடிக்கும் பூச்சிகள் நுழைந்துள்ளன.

வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மற்றும் ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் பரவலாக காணப்படும் இந்த பிளேன் லேஸ் பூச்சி (plane lace bug), இப்போது லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பரவுவதற்கான திறனை கொண்டுள்ள இந்த பூச்சிகளை கண்டறிய, வனத்துறை ஆணையம் மற்றும் வுட்லண்ட் டிரஸ்ட் (Woodland Trust) அமைப்பு, தன்னார்வத் தொண்டர்களைக் கூப்பி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

முதல் முறையாக லண்டன் நகரின் மையப் பகுதியில் இந்த பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன, மேலும் இதனால் அச்சுறுத்தலாக உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிளேன் மரங்கள் (plane tree) இவற்றின் முக்கிய உணவாகும். பூச்சிகள் மரத்தின் சாற்றைக் குடித்து மரங்களை பாதிக்கின்றன.

வுட்லண்ட் டிரஸ்ட அமைப்பின் வல்லுநர்கள் கூறுகையில், இந்த பூச்சிகள் பெரும்பாலும் குறைந்த ஆற்றல் கொண்ட மரங்களை மட்டுமே தாக்கும். குறிப்பாக, நகரங்களில் அதிகமான வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மரங்கள் இவற்றால் பலவீனப்படுத்தப்படுகின்றன.

மேலும், இந்த பூச்சிகள் பசுமரங்களில் வீடு கொண்டு வாழ்வதோடு, மனிதர்களின் உடலிலும் ஏறிவிடுகின்றன, சில நேரங்களில் கடித்து தோல் அரிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த பூச்சிகளை கண்டறிய பொதுமக்கள் உதவ வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Observatree திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வ தொண்டர்கள், மரங்களில் விழும் இத்தகைய பூச்சிகளை கண்காணிக்கின்றனர்.

பிளேன் லேஸ் பக் பூச்சிகள் தங்களைப் பாதுகாக்கும் திறன் வாய்ந்தவை மற்றும் வாகனங்கள், உடைகள், பைகள் ஆகியவற்றில் பறவுவது வழக்கமாகும். இதனால் இவை வேகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மெக்டேக்ஸ் மரங்களில் இவை அதிகமாக பரவுவதாகவும், இதனால் பாரிய அளவிலான மரச்சேதம் ஏற்படக்கூடும் என்றும் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.