கத்தியால் 50 முறை தாக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்ட இளைஞர்: பிரான்ஸில் சம்பவம்
தென் பிரெஞ்சு நகரமான மார்சேயில் இளைஞர் ஒருவர் கத்தியால் 50 முறை தாக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலக்காவது இளம் வயதினர்
பிரான்ஸின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மார்சேய் போதை மருந்து தொடர்பான வன்முறைகளால் சீரழிந்து போயுள்ளது. மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள வரலாற்று துறைமுக நகரமான மார்சேயில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் போதை மருந்து குழுக்கள் சமீபத்திய ஆண்டுகளில் போட்டியிட்டு வருகின்றனர்.
போதை மருந்து குழுக்கள் இடையே நடக்கும் மோதல்களில் பெரும்பாலும் இலக்காவது இளம் வயதினர் என்றே அரசு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வகையில் புதன்கிழமை மிகக் கொடூரமான முறையில் 15 வயதேயான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தொடர்புடைய கொலையில் 14 வயது சிறுவனுக்கு தொடர்பிருப்பதாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை மார்சேய் நகரில் போதை மருந்து தொடர்பான கொலைகளின் எண்ணிக்கை 17 என அதிகரித்துள்ளது.
உயிருடன் நெருப்பு
23 வயது இளைஞர் ஒருவர் 2,000 யூரோ கட்டணத்திற்கு தமது போட்டியாளரின் வீட்டு கதவில் நெருப்பு வைக்கும் பொருட்டு சமூக ஊடகம் வாயிலாக அந்த 15 வயது இளைஞரை பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளார்.
அந்த 23 வயது நபர் சிறைக்குள் இருந்துகொண்டே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், அந்த 15 வயது இளைஞர் எதிர் தரப்பினரிடம் சிக்க, கத்தியால் 50 முறை தாக்கப்பட்டு, பின்னர் உயிருடன் நெருப்பு வைத்துள்ளதாகவே விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த கொலைக்கு பழி வாங்கும் நோக்கில் 50,000 யூரோ கட்டணத்திற்கு 14 வயது சிறுவனை அந்த 23 வயது சிறை கைதி மீண்டும் களமிறக்கியுள்ளான். இந்த சம்பவத்தில் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அந்த 14 வயது சிறுவனும் பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.