விண்வெளியில் இருந்தபடி வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தவாறு வாக்களிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் உள்ளார்.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் அவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீற்றர் தொலைவில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிய வந்தது.
விண்வெளி வீரர்களை அழைத்துவர சமீபத்தில் Space X விண்கலம் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளது. இதனால் பிப்ரவரி மாதம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவர் என கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
ஆனால், அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெற உள்ளதால், அவர்கள் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் விண்வெளி மையத்தில் இருந்தே ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் முதலில் பெடரல் போஸ்ட் கார்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் சுனிதா வில்லியம்ஸ், அதன் பின் விண்வெளி கணினி மூலம் மின்னணு வாக்களிக்க உள்ளார்.
இந்த வாக்களிக்கும் முறையானது கடந்த 1997ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.