பிரித்தானியாவில் வீடு ஒன்றில் சடலமாக கிடந்த தம்பதி: துப்பாக்கியை கண்டெடுத்த பொலிஸார்!
பிரித்தானியாவில் 70 வயது மதிக்கத்தக்க தம்பதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட தம்பதி
பிரித்தானியாவின் கார்டிஃப்(Cardiff) பகுதியில் உள்ள வீட்டில் 70 வயது மதிக்கத்தக்க தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நகரின் Trowbridge அருகே உள்ள வீட்டில் தம்பதிகளின் திடீர் மரணம் குறித்து சவுத் வேல்ஸ் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இருப்பினும் இதில் 72 வயதுடைய பெண் மற்றும் 74 வயது உடைய ஆண் உயிரிழந்து இருப்பதாக நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட துப்பாக்கி
இந்நிலையில் சம்பந்தப்பட்ட சொத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், வளர்ப்பு நாய் ஒன்று சடலமாக கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை 2.50pm மணியளவில் Morfa Crescent-யில் உள்ள சொத்துக்கு வந்த பொலிஸார் சடலங்களை மீட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், இந்த சம்பவத்தில் பொலிஸார் இதுவரை யாரையும் தேடவில்லை என தெரிவித்துள்ளது.