;
Athirady Tamil News

உக்ரைன் சார்பில் கூலிப்படையாக செயல்பட்ட அமெரிக்கர் கைது: ரஷ்யா விதித்துள்ள அதிகபட்ச தண்டனை

0

கூலிப்படை வீரராக உக்ரைன் சார்பில் சண்டையிட்ட 70 வயதான அமெரிக்கருக்கு ரஷ்யா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்கருக்கு சிறைத் தண்டனை
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இசியம்(Izyum ) பிராந்தியத்தில் உக்ரைனிய பாதுகாப்பு குழுவுடன் ஓய்வூதியம் பெறும் 72 வயது அமெரிக்கர் ஸ்டீபன் ஹப்பார்ட்(Stephen Hubbard) மாதத்திற்கு $1,000 என ஒப்பந்தம் செய்து கொண்டதாக ரஷ்ய படைகளால் உக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் எவ்வாறு, கைது செய்யப்பட்டு எப்போது மாஸ்கோவுக்கு கொண்டு வரப்பட்டார் என்பது தெளிவாக தெரிய வராத நிலையில், போர் தொடங்கிய கொஞ்ச நாட்களில் அதாவது ஏப்ரலில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மூடிய கதவுகளுக்குள் நடந்த விசாரணையின் இறுதியில், உக்ரைன் சார்பில் கூலிப்படை வீரராக செயல்பட்டதற்காக ஓய்வூதியம் பெறும் அமெரிக்கர் ஸ்டீபன் ஹப்பார்ட்க்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனத்தின் தகவல் படி, ஸ்டீபன் ஹப்பார்ட் 2014ம் ஆண்டு உக்ரைனுக்கு இடம்பெயர்ந்ததாக தெரியவந்துள்ளது.

அமெரிக்கா பதில்
மேற்கத்திய நாடுகளுடன் 24 பிணைக் கைதிகள் பரிமாற்றத்தை ரஷ்யா செய்து கொண்ட பிறகு, ஸ்டீபன் ஹப்பார்ட் தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய புள்ளி நிலவரப்படி, ஸ்டீபன் ஹப்பார்டை சேர்த்து 10 அமெரிக்கர் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், அமெரிக்கர் மீதான கைது மற்றும் தண்டனை அறிக்கைகள் குறித்து தெரிந்துள்ளோம், தனியுரிமை காரணமாக இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.