;
Athirady Tamil News

ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு உதவும் பிரான்ஸ்

0

ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு உதவ பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பிரான்ஸ் எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் உக்ரைனுக்கு மிராஜ் (Mirage) 2000-5 போர் விமானங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

குறித்த விமானங்கள் மாறுபட்ட போர் மற்றும் மின்காந்த தற்காப்பு திறன்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மிராஜ் 2000-5 போர் விமானம்

அத்துடன், இந்த விமானங்களை செலுத்துவதற்கு பிரான்ஸ் உக்ரேனிய விமானப் படை வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றது.

இதேவேளை, பிரான்ஸிடமிருந்து உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ள மிராஜ் (Mirage) 2000-5 போர் விமானங்கள் எண்ணிக்கை தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மிராஜ் 2000-5 என்பது பிரெஞ்சு நிறுவனமான Dassault உருவாக்கிய ஒரு மல்டிரோல், ஒற்றை எஞ்சின் போர் விமானமாகும்.

நான்காம் தலைமுறை போர் விமானமான மிராஜ் 2000-5 விமானம் உக்ரைன் இப்போது பயன்படுத்திவரும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களைப் போன்றதாகும்.

உக்ரைனுக்கு ஏற்கெனவே நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் F-16 போர் விமானங்களை வழங்கியுள்ளன.

மேலும், இந்த விமானங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவை உக்ரைன் விமானப்படைக்கு சில நன்மைகளை வழங்குகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.